'நூறு சாமி' படத்தின் அப்டேட்

இந்தப் படம் வருகிற மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது.
'நூறு சாமி' படத்தின் அப்டேட்
Published on

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ‘நூறு சாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் வருகிற மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் டீசர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள ‘நூறு சாமி’ படம் ஒரு குடும்பத்தில் நிலவும் அன்பு, போராட்டங்கள் நிறைந்த கதைக்களம் என கூறப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com