கருட ராம்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய Non Violence படக்குழு

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். வில்லனாக கருட ராம் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கருட ராம்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய Non Violence படக்குழு
Published on

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் வில்லனாக கருட ராம் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஜி.எஃப் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனத்தில் இடம் பிடித்தவர். அதற் கடுத்து தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com