‘ராதாவின் புகாரில் உண்மையில்லை’ - தங்கையின் குற்றச்சாட்டிற்கு நடிகை அம்பிகா விளக்கம்!

பிரச்னைகளை தீர்க்க ராதாவே முன்வந்துதான் காசோலைகளை வழங்கியதாக நடிகை அம்பிகா குறிப்பிட்டுள்ளார்.
‘ராதாவின் புகாரில் உண்மையில்லை’ - தங்கையின் குற்றச்சாட்டிற்கு நடிகை அம்பிகா விளக்கம்!
Published on

நடிகையும், தனது அக்காவுமான அம்பிகா மீதும், தனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீதும் குற்றம் சாட்டி நடிகை ராதா இன்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், தான் கையைழுத்திட்டு வைத்திருந்த காசோலைகளை தனது அனுமதியின்றி எடுத்து, அதில் தொகை மற்றும் பிற விவரங்களை நிரப்பி ரூ.46 கோடி பணத்தை மோசடி செய்ய நடிகை அம்பிகா முற்பட்டதாக நடிகை ராதா தெரிவித்திருந்தார்.

இந்த மோசடிக்கு அவரது தம்பி, அம்பிகாவிற்கு துணையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

சொத்து தகராறு

மேலும் கடந்த ஒன்றரை வருடங்களாகத் தனது குடும்பச் சொத்து பகுதிக்குள் தன்னை நுழைய விடாமல் அம்பிகாவும், சகோதரரும் தடுத்து வருவதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்தார்.

அம்பிகா மறுப்பு

இந்த புகார்கள் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், நடிகை அம்பிகா, ராதாவின் இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தங்களிடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் நிலம், தொழில் மற்றும் தங்கம் தொடர்பான குடும்ப சொத்து தகராறுகளை தீர்க்க கடந்த ஜூலை மாதமே தான் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாகவும்,

அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்கின் அடிப்படையிலேயே பிரச்னைகளை தீர்த்துகொள்ள நடிகை ராதா தனக்கு 5 காசோலைகளை வழங்கியதாகவும் நடிகை அம்பிகா குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com