

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை. என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை.
“அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.