தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்.

பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது.

இந்நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம், அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com