புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது
புஷ்பா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா தி ரைஸ்'படம் வெற்றி பெற்றதையடுத்து. உலகளவில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் 373 கோடி ரூபாய் வசூளித்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.

இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இதனை இயக்கி வருகிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) 11.07 மணியளவில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

படப் போஸ்டரில் அல்லு அர்ஜூன் ஒரு சிம்மாசனத்தின் மீது கோடாரியுடன் உட்கார்ந்து இருப்பது போல் காட்சிகள் அமைந்து இருக்கிறது. அவருக்கு பின்னால் ஒரு கூட்டம் கையில் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். இந்தப் போஸ்டர் இப்பொழுது ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிக்ப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com