மோகன்லால் - அனூப் சத்யன் இணையும் புதியப் படம் - பூஜையுடன் தொடங்கியது!

படப்பிடிப்பு இன்று கொச்சியில் பூஜையுடன் தொடங்கியது.
மோகன்லால் - அனுப் சத்யன் இணையும் புதியப் படம் - பூஜையுடன் தொடங்கியது!
Published on: 

துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா ஆகியோர் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானப் படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இப்படத்தை இயக்கிய இயக்குநர் அனூப் சத்யன், தற்போது நடிகர் மோகன்லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்.

‘லாலேட்டன் 368’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், பினு ஜார்ஜ் அலெக்சாண்டருடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார்.

படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தால், மோகன்லால் இப்படத்தில் ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. மோகன்லால் வெளியிட்டுள்ள போஸ்டரில் அவரது அருகில் இரு சிறுமிகள் அமர்ந்துள்ளனர்.

விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X