நீட் கொடுமையை எதிர்க்கும் `அஞ்சாமை' - கவனம் ஈர்க்கும் டிரைலர்

விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார்.
நீட் கொடுமையை எதிர்க்கும் `அஞ்சாமை' - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Published on

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது, அரசு மாணவர்களின் நிலமை மற்றும் எப்படி கல்வி வியாபாரமாக ஆகியுள்ளது போன்ற சமூக பிரச்சனையை பேசக் கூடிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.

படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com