இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
Singer Krishnaraj
Published on: 

தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் இன்று காலமானார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

காதல் கோட்டை படத்தில் இருந்து வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.., பொற்காலம் படத்தில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் மண்ணு எடுத்து.., உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் கிருஷ்ணராஜ்.

சமீபத்தில் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகரான இவர், தேவாவின் இசையில் பல்வேறு ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com