'மூக்குத்தி அம்மன் 2' படவெற்றிக்காக பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் வழிபட்ட ஐசரி கணேஷ், சுந்தர் சி
Published on: 
Summary

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெற்றிக்காக சோழிங்கநல்லூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீபாவளி வெளியீட்டுக்காக தயாராகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’ – மஹாசக்தி படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பிரார்த்தனை நடத்தினர். இவர்களுடன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்துகொண்டார்.

படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், சுனில் மற்றும் கருடா ராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி படம் வரும் 6-ந்தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தச் சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன.

X