

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மித்ரா.
குறிப்பாக, தளபதி விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த 'காவலன்' திரைப்படத்தில் நடிகை அசினிற்கு தோழியாக 'மது' என்ற கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டியெங்கும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.
திருமணத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து முற்றிலும் விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த மித்ரா குரியன், தற்போது மீண்டும் தனது திரைப்பயணத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டார்.
இவருடைய இந்த மறுபிரவேசம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி, ரவி தேஜா நடித்த க்ராக் , பலுபு போன்ற தெலுங்கில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் கோபிசந்த் மாலினேனி.
தற்போது இவருடன் நடிகை மித்ரா குரியன் கைகோர்த்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் மாஸ் மற்றும் முன்னணி ஆக்ஷன் ஸ்டாரான நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஒரு வலுவான மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க மித்ரா ஒப்பந்தமாகியுள்ளார்.
வெறும் நாயகியாக வந்து செல்லும் கதாபாத்திரம் இல்லாமல், கதையின் ஓட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான ஒரு பவர்ஃபுல் ரோலில் அவர் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
விஜய் படங்களில் துள்ளலான, குறும்புத்தனம் நிறைந்த முகத்துடன் பார்த்த மித்ராவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது பாலகிருஷ்ணா படத்தில் முற்றிலும் புதிய அவதாரத்தில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.