சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி

சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது முதிர்வு காரணமாக கோவையில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததில் நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 94. நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நாதாம்பாளின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com