ஓ.டி.டி.யில் வெளியாகும் 'மீசைய முறுக்கு 2'

இப்படத்தை, ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி
Published on: 
Summary

'மீசைய முறுக்கு 2' திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி முதல் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை ஓ.டி.டியில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மீசைய முறுக்கு 2’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது அதன் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓ.டி.டி. ரிலீஸ்

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ந்தேதி முதல் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. திரையரங்குகளில் இந்தத் திரைப்படத்தைக் காணத் தவறிய ரசிகர்கள் தற்போது இதனை ஓ.டி.டியில் கண்டு மகிழ ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com