'மணிகண்டா' படத்தின் First Single பக்தி பாடல் வெளியானது!

பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் தனது கணீர் குரலில் இப்பாடலைப் பாடியுள்ளார்.
Ayyappan  Song
Published on: 
Summary

மலையாளத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'மாளிகைப்புரம்' படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இணைந்துள்ள திரைப்படம் 'மணிகண்டா' (Manikanda).

நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் 7 பாடல்களில் இரண்டாவது பாடலான "கருப்பர் வந்தா ஐயன் வருவார்" லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரேம்ஜி அமரன் இசையில் சிலிர்க்க வைக்கும் பக்திப் பாடல்

சபரிமலை மண்டல காலத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்குச் சிறப்பான விருந்தாக இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான ஜே.கே. சரவணா எழுதியுள்ள ஆவேசமும் பக்தியும் கலந்த வரிகளுக்கு, 'இசை சித்தர்' பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் தனது கணீர் குரலில் இப்பாடலைப் பாடியுள்ளார். "ஜவ்வாது மணம் மணக்குது, மல்லிகைப்பூ வாசம் இழுக்குது... அந்த ஐயனுக்கே கருப்பன் தாண்டா காவல், கருப்பன் வந்தா கண்டிப்பா ஐயன் வருவான்டா" எனத் தொடங்கும் வரிகளும், பத்மநாபனின் நாதஸ்வரம் மற்றும் கவிராஜ், ஜெயச்சாவின் அதிரடி தாள இசையும் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் சிறப்புத் தோற்றம்

ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் வைபவ் உடன் இணைந்து ஆடுகளம் நரேன், அரவிந்த் ஆகாஷ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் ரவி மோகன் (ஜெயம் ரவி), மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, கிருஷ்ணா, மஹத், பிரேம்ஜி அமரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வெளியீடு

நந்தகுமார் தமிழ்ச்செல்வனின் கருவில், ஆதித்யா தங்கிராலா மற்றும் ஜே.கே. சரவணா திரைக்கதை எழுத, பிரித்வி ஆதித்யா வசனம் எழுதியுள்ளார்.

யுவன் செல்வா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பையும், சூர்யா ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

ஏ.பி. இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடும் 'மணிகண்டா' திரைப்படம், இந்த மண்டல காலத்திலேயே உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என பான் - இந்தியா படமாகவும் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X