தனுஷ் நடிக்கும் "ஓம் - சாப்டர் 1.." மம்மூட்டியின் மாஸான அறிமுக வீடியோ

வீடியோவின் இறுதியில் தனுஷ் உடன் அவர் தோன்றும் பிரேம் தனி ரகம்.
தனுஷ் நடிக்கும் "ஓம் - சாப்டர் 1.." மம்மூட்டியின் மாஸான அறிமுக வீடியோ
Published on

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'ஓம்' படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

'அமரன்' வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓம் - சாப்டர் 1

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகைகளான சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசை

நேற்று மம்மூட்டி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடியதை ஒட்டி அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை ஓம் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 2 நிமிட நீளம் அமைந்துள்ளது.

இப்படத்தில் மம்மூட்டி பர்மா கார்த்திகேயன் என்ற கடத்தல் மன்னன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக வீடியோவில், "பழையன கழிதலும் புதியன புகுதலும்", "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்" என தமிழ் பழமொழிகளை அள்ளித் தெளிக்கிறார். வீடியோவின் இறுதியில் தனுஷ் உடன் அவர் தோன்றும் பிரேம் தனி ரகம்.

ஒட்டுமொத்தத்தில் இவ்வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.

முன்னதாக நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலாகா லூவா’ பாடல் வெளியாகியிருந்தது. சாய் அப்யங்கர் இசையில் இப்பாடல் வைப் மெட்டீரியல் ஆக வந்திருந்தது.

ரிலீஸ்

படத்திற்கு எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளைச் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாஸ்டர்களான யானிக் பென், கேச்சா ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.

பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜக்மாக் ஆகியோர் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com