கார் விபத்தில் சிக்கினார் நடிகை மலாய்கா அரோரா

மும்பை-புனே விரைவுச் சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மலாய்காவின் கார், 2 கார்கள் மீது மோதியது.
மலாய்கா அரோரா
மலாய்கா அரோரா
Published on

மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற இடத்தில் இந்தி நடிகை மலாய்கா அரோரா சென்ற ரேஞ்ச் ரோவர் கார் விபத்துக்குள்ளானது. 

ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விரைவுச் சாலையில் சென்ற மற்ற 2 கார்கள் மீது மோதியது. விபத்தால் அதிர்ச்சியடைந்த மலாய்காவுக்கு நெற்றி மற்றும் கண் அருகே சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  சில தையல்கள் போடப்பட்டுள்ளதாக மலராய்காவின் நண்பர் தெரிவித்துள்ளார். 

விபத்து குறித்து விசாரித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com