வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலு- பகத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98-வது படமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், 'மாரீசன்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர். ஆடுவதுப்போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com