

சந்தானம் நடிக்கும் 'லவ் பைட்' படம் டிசம்பர் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹாரர்-காமெடி மற்றும் சர்வைவல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘லவ் பைட்’. இப்படத்தை, 'கான்ஜூரிங் கண்ணப்பன்' பட புகழ் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம், ஒரு ஹாரர்-காமெடி மற்றும் சர்வைவல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
‘லவ் பைட்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 2026-ல் பூஜையுடன் தொடங்கி, காரைக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ‘லவ் பைட்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘லவ் பட்’ படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விரைவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.