

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் குமாரசம்பவம் படம் மூலம் வெள்ளி திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அச்சு ராஜமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படம் எடுக்கப்பட்ட விதம் தொடர்பான மேக்கிங் (Making) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.