அகமதாபாத் விமான விபத்தினால் தள்ளிப்போன குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.
அகமதாபாத் விமான விபத்தினால் தள்ளிப்போன குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் "குபேரா" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். "குபேரா" திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் மாதம் 20-ந்தேதி வெளியாகிறது.

படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 3 மணி நேரம் 15 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது திரைப்படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்துள்ளனர்.

இந்நிலையில், குபேரா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. அதேப்போல் இன்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெறுவதாக இருந்தது. ஆனால் நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை தள்ளிவைத்துள்ளனர். இதனால் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com