வசூல் வேட்டை..! 4 நாளில் ரூ.100 கோடியை அள்ளிய "குபேரா"

படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது.திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
வசூல் வேட்டை..! 4 நாளில் ரூ.100 கோடியை அள்ளிய "குபேரா"
Published on

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, குபேரா திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com