இரண்டாவது முறையாக பெற்றோராகும் கியாரா அத்வானி - சித்தார்த் தம்பதி!

மகள் சாராயாவின் பிஞ்சு கைகளுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளனர்.
Kiara advani - Sidharth Malhotra
Published on: 
Summary

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியர், தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ஏற்கனவே 2025-ஆம் ஆண்டில் சாராயா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாகப் பெற்றோராகப் போகும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கியாரா - சித்தார்த் பதிவு

தங்களது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் ஒருமுறை மிகச்சிறந்த பரிசைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். எங்கள் இதயங்கள் அன்பினாலும் நன்றியினாலும் நிறைந்துள்ளன என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது முதல் குழந்தை பிறப்பின் போது, ஒரு ஜோடி சிறிய வெள்ளை நிறக் குழந்தைக் காலணிகளை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தனர். தற்போது தங்களது இரண்டாவது குழந்தை அறிவிப்பிலும் அதே காலணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் தங்களது மகள் சாராயாவின் பிஞ்சு கையும் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே பாலிவுட் திரையுலகினர் தங்களது வாழ்த்துகளைக் குவிக்கத் தொடங்கினர்.

சித்தார்த் மல்ஹோத்ராவின் திரைத்துறை வழிகாட்டியான பிரபல இயக்குனர் கரண் ஜோஹர், முதலாளாளாக "லவ் லவ் யூ" என்று பதிவிட்டு பல இதயக் குறியீடுகளுடன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் அதியா ஷெட்டி, பூமி பெட்னேகர் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் இந்தத் தம்பதிக்குத் தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

காதல் முதல் திருமணம் வரை

கியாரா அத்வானியும் சித்தார்த் மல்ஹோத்ராவும் கடந்த 2023 பிப்ரவரி மாதம் ராஜஸ்தானில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

தங்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் இந்தத் தம்பதி, தற்போது தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட மைல்கல்லை எட்டியுள்ளனர்.

கலைப்பயணம்

குடும்ப வாழ்க்கையையும் தாண்டி இருவரும் திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாகப் பணியாற்றி வருகின்றனர்:

'கபீர் சிங்', 'ஷெர்ஷா', 'ஜக்ஜக் ஜியோ' போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இவர், சமீபத்தில் நடிகர் யாஷ், நயன்தாரா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோருடன் இணைந்து 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்', 'ஏக் வில்லன்', 'கபூர் அண்ட் சன்ஸ்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இவரின் சமீபத்திய வெளியீடு 'தி வான்' திரைப்படமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com