மறைந்த இயக்குநர் பாக்யராஜ் குடும்பத்தினருக்கு குஷ்பு - சுந்தர்.சி நேரில் ஆறுதல்

பாக்யராஜ் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Kushboo-SundharC at Bhakyaraj house
Published on

மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாக்யராஜ் உடல் நேற்று நண்பகல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திரைத்துறைக்கு இயக்குனர் பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழக அரசு சார்பில் இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, கே.பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், நடிகை குஷ்பு மற்றும் அவரது கணவரும் இயக்குனருமான சுந்தர் சி இன்று பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், பாக்யராஜ் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

குஷ்பு- சுந்திர்.சியின் மூத்த மகளின் திருமணம் 26ம் தேதி கோவாவில் நடைபெற்றது. இச்சுபநிகழ்வில் பாக்யராஜூம் கலந்துக்கொண்டுள்ளார். கோவாவில் இருந்து அன்று இரவு வீடு திரும்பிய நிலையில், மறுநாள் (27.6.2026) காலை மாரடைப்பால் பாக்யராஜ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com