

நடிகர் கென் கருணாஸ் மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோர் புதிய திரைப்படத்திற்காக மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தும் வகையில், "ரொமான்டிக் ஹீரோ & ரொமான்டிக் கம்போஸர்" என்ற பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கென் கருணாஸ் தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் "Romantic Hero & Romantic Composer " என்ற வாசகத்துடன் புதிய புரோமோ வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இதே வீடியோவை இசை நிறுவனமான சோனி மியூசிக் சவுத் பக்கமும் பகிர்ந்து, இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு சுவாரசியமான அறிவிப்பு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கென் கருணாஸ் கதாநாயகனாகவும், பிரபல இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.
இந்தப் புதிய புரோமோ வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. வழக்கம் போல் நெல்சன் - அனிருத் பாணியிலான ஜாலியான புரோமோ வீடியோவாக இது அமைந்துள்ளதாக ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், இளம் தலைமுறை கூட்டணியான இவர்களின் இசை மற்றும் நடிப்புப் பயணம் குறித்துப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும் இந்த வீடியோவில் 'இன்னும் இரண்டு நாட்களில் சொல்றோம் பா' என்ற வாசகத்துடனும் முடித்துள்ளனர்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.