இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கென் கருணாஸ்

வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
கென் கருணாஸ் பகிர்ந்த புகைப்படம்
கென் கருணாஸ் பகிர்ந்த புகைப்படம்
Published on
Summary

'ராஜன் வகையறா' படப்பிடிப்பு தளத்திலிருந்து தானும் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் கென் கருணாஸ்.

ராஜன் வகையறா

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கைவசம் ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ படங்கள் உள்ளன. இதில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் ‘அரசன்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘ராஜன் வகையறா’ படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் வடசென்னையின் அமீர் கதாபாத்திரத்தின் இளம்வயது வாழ்க்கையில் நடிகர் கென் கருணாஸ் நடித்து வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து

இந்த நிலையில், தனித்துவமான படைப்புகளால் தமிழ் சினிமாவை உச்சிக்குக் கொண்டு சென்ற இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பு தளத்திலிருந்து தானும் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் கென் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் வெற்றிமாறன் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com