கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ டிரெய்லர் வெளியானது!

படம் நவ.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ டிரெய்லர் வெளியானது!
Published on: 

பிரவின் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், ஹார்ட் பீட் புகழ் சாருகேஷ், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளப் படம் சத்தியவான் சாவித்திரி.

ஜீ ஸ்டுடியோஸ், ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் தனது கணவரை சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்) எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. கீர்த்தி சுரேஷ் இதில் ஒரு வக்கீலாக நடித்துள்ள நிலையில், அவரை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக மிஷ்கின் இருக்கிறார்.

நவ.20ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.

X