என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறது..!
    X

    கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறது..!

    • ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கடந்தாண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
    • திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாக இதுவாகும்.

    நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். கடந்தாண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

    நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பெயர் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

    கதை நாயகியாக ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

    கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாக இதுவாகும்.

    Next Story
    ×