இளையராஜா இசையில் நடிப்பேன் என நினைத்ததில்லை- நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ் பேச்சு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கனவு திட்டத்தில் எனக்கு பிடித்த மனதில் நிற்கிற கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல கண்டிப்பாக பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
Published on
Summary

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மதுரையை மையமாகக் கொண்டு உருவான ‘டோரதி’ படத்தில் மலையாள பெண்ணாக புதுமையான கேரக்டரில் நடித்துள்ளேன் என கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார். இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைக்கவில்லை, இந்த படத்தின் மூலம் அது நிஜமானது என அவர் நன்றி தெரிவித்தார். ரிஷி, சனந்த் நடித்த விதம் ரசிகர்களை கவரும் எனவும், உலகளவில் பேசப்படும் தமிழ் படமாக ‘டோரதி’ இருக்கும் எனவும் கூறினார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘டோரதி’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். மதுரையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படம் வருகிற 25-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:-

ஜிகர்தண்டா

‘டோரதி’ படத்தில் மலையாள பெண்ணாக நடிக்கிறேன். இதுவரை பல கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் ரொம்ப புதுமையான கேரக்டர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கனவு திட்டத்தில் எனக்கு பிடித்த மனதில் நிற்கிற கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல கண்டிப்பாக பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்.

இளையராஜா இசையில் நடிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை. இந்த படத்தின் மூலம் நிஜமாக்கியதற்கு இளையராஜாவுக்கு நன்றி. மதுரை என்றாலே எனக்கு பிடிப்பது ஜிகர்தண்டா. அடுத்தது மீனாட்சியம்மன் கோவில். இந்த படமும் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகியது. நல்ல ஒரு வைப் தான். ரிஷியும், சனந்தும் படத்தில் பயங்கரமாக நடித்துள்ளனர். அவர்களுக்காக தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நானும் விசிலடிக்கிறேன். ‘டோரதி’ தமிழ் படம் என்பதில் நாம் பெருமைப்படலாம். உலக அளவில் பேசும் படமாக இந்த படம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com