நடிகை கயாடு லோஹர் குடித்த தண்ணீர் பாட்டில் விலை ரூ.3 லட்சம்

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.
நடிகை கயாடு லோஹர்
Published on: 
Summary

கயாடு லோஹர் குடித்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.3 லட்சம் என ரசிகர் ஒருவர் பதிவிட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரின் வியப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கயாடு லோஹர். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளம்

இந்நிலையில் கயாடு லோஹர் பற்றிய ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் குடித்த தண்ணீர் பாட்டில் விலை ரூ.3 லட்சம் எனவும் அந்த பாட்டில் விற்பனைக்கு உள்ளது எனவும் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், கயாடு லோஹர் தண்ணீர் குடிக்கும் புகைப்படத்துடன் இந்த பாட்டில் கோழிக்கோட்டில் உள்ளது எனவும் பாட்டிலில் தண்ணீர் சிறிதளவு உள்ளது. அந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.3 லட்சம் என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து வியப்போடு மட்டுமின்றி வெறுப்போடும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com