அனிருத்-காவியா மாறன் தம்பதிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்

சென்னையில் இன்று பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Anirudh-Kavya Maran Wedding Reception
Published on: 
Summary

அனிருத் காவியா மாறன் புதுமண தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ந்தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ப்ளூ கோட் அணிந்து வந்த முதலமைச்சர் விஜய், அனிருத் மற்றும் காவியா மாறன் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு,

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.பி.ஐ. முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

X