தியோலினா, தியான் லியோ - இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!

ஜூலை மாதம் இரட்டையர்கள் பிறந்ததாக கவின் அறிவித்திருந்தார்.
தியோலினா, தியான் லியோ  - இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கும் கவின் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயரை சமூக வலைதளப் பக்கம் வாயிலாக ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அதன்படி பெண் குழந்தைக்கு தியோலினா கவின் என்றும், ஆண் குழந்தைக்கு தியான் லியோ கவின் என்றும் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறைவனுக்கு நன்றி

நடிகர் கவின் தனது நீண்டநாள் தோழியான மோனிகாவை கடந்த 2023ம் ஆண்டு கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. இந்த நற்செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்த கவின்.,

“எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி.எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com