கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டும் 'என்ன விலை' டிரெய்லர்!

'என்ன விலை' திரைப்படம் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Enna Vilai Trailer
Published on
Summary

தேசிய விருது பெற்ற மலையாளத் திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பாழூர் இயக்கத்தில், நடிகர் கருணாஸ் மற்றும் பிரபல நடிகை நிமிஷா சஜயன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

நீதிமன்ற பின்னணியில் ஒரு பரபரப்பான கதைக்களம்

தற்போது வெளியாகியுள்ள 'என்ன விலை' திரைப்படத்தின் டிரெய்லர், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே நடக்காத ஒரு விசித்திரமான மற்றும் மிகவும் அரிய வழக்கை மையமாகக் கொண்டு கதை நகர்வதை உணர்த்துகிறது.

டிரெய்லரின் தொடக்கத்திலேயே வழக்கறிஞர் ஒருவர், "மை லார்ட், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக..." என வாதாடும் வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

இப்படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிமிஷா சஜயன் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ஒரு முக்கிய சமூக அல்லது மாநிலப் பிரச்சனைக்கு இந்த வழக்கு எப்படி காரணமாக அமைகிறது என்பதை விறுவிறுப்பான நீதிமன்றக் காட்சிகளுடன் டிரெய்லர் வெளியாகி விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயனுடன் இணைந்து விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், சேத்தன் சீனு, மோகன் ராமன், பூர்ணிமா பாக்யராஜ், தீபா சங்கர், டி.எஸ்.ஆர் சீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு

தேசிய விருது பெற்ற சஜீவ் பாழூர் எழுத்து மற்றும் இயக்கத்தில், 'விக்ரம் வேதா', 'கைதி' படப்புகழ் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவையும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.

'களமயா சினிவெர்ஸ்' வழங்கும் கிதேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் பின்னணி இசை மற்றும் டொல்பி அட்மாஸ் ஒலிப்பதிவு ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com