கார்த்திக்கு வில்லனாகும் சத்யராஜ்- வா வாத்தியார் படத்தின் புதிய அப்டேட்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது. படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார்.
கார்த்திக்கு வில்லனாகும் சத்யராஜ்- வா வாத்தியார் படத்தின் புதிய அப்டேட்
Published on

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி செட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வா வாத்தியார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது.

சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இப்படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வித்தியாசமான வில்லனாக சத்யராஜ் நடதுள்ளார். மேலும் அவர் இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார். டீசரில் ஒரு கெட்டப்தான் காண்பிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com