

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சர்தார் 2’.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
‘சர்தார் 2’ படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.