ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘கர’... எப்போது தெரியுமா?

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘கர’... எப்போது தெரியுமா?
Published on

போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘கர’. இந்தப் படத்தின் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் கே. எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் இந்த கதை நகர்கிறது. திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு நேர்மையாக வாழ நினைக்கும் நாயகன், வங்கி ஜப்தி நடவடிக்கை காரணமாகத் தன் தந்தையின் உடலைச் சொந்த நிலத்தில் புதைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் ஏற்படும் அதிருப்தியில், அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க அவர் திட்டமிடுவதை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லராக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கர’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், ‘கர’ படத்தின் ஓ.டி.டி. வெளியீடு தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘கர’ திரைப்படம் வருகிற 28-ந்தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com