

இந்த நிலையில், கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் உயிரிழந்த சம்பவம் படக்குழு மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பில்லி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவர் இன்று (அக்டோபர் 30) அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்ததாக தெரிகிறது.
இவர் உயிரிழந்ததற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இவருக்கு வயது 43. இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கும் கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தொகுப்பாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.