‘கமல் ஸ்ரீதேவி’ - காதல் கதையில் பிரபுதேவா, சிம்ரன்!

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, சலீம் அனார்கலி காதல் வரிசையில் கமல் ஸ்ரீதேவி.
‘கமல் ஸ்ரீதேவி’ - காதல் கதையில் பிரபுதேவா, சிம்ரன்!
Published on: 

பிரபு தேவா, சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இக்காதல் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி, மண்டாடி படங்களில் நடித்த மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா மணிமேகலை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியன் ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.

எம்ஆர்பி என்டர்டெயின்மென்டு நிறுவனம் மூலம் சௌந்தர்யா ரஜினிகாந்த தயாரிக்கும் 5வது படம் இதுவாகும்.

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, சலீம் அனார்கலி காதல் வரிசையில் இப்போது கமல் ஸ்ரீதேவி என பட அறிவிப்பு வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் படத்தின்மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com