சித்தா இயக்குநருடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன் - லுக் டெஸ்ட் காட்சிகள் இணையத்தில் வைரல்!

சித்தார்த்தை வைத்து இயக்கியிருந்த சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
சித்தா இயக்குநருடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன் - லுக் டெஸ்ட் காட்சிகள் இணையத்தில் வைரல்!
Published on

சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

லுக் டெஸ்ட் புகைப்படங்கள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

'லுக் டெஸ்ட்' வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com