அனைத்து ரெக்கார்டுகளையும் தகர்த்தெறியும் கல்கி 2898 ஏ.டி

இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.
அனைத்து ரெக்கார்டுகளையும் தகர்த்தெறியும் கல்கி 2898 ஏ.டி
Published on

கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர்.

முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com