கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு

படத்தின் இந்தி மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது,கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு
Published on

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது.

கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இந்தி மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது, தென் இந்திய மொழி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளது.

திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் ஆகஸ்ட் 23 வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com