ஓடிடியில் வெளியாகும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா திரைப்படம்

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1' படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார்.இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.
ஓடிடியில் வெளியாகும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா திரைப்படம்
Published on

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1' படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்துள்ளார்.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியானாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் மாதம் 8-ந்தேதி தேவரா படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இடப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com