ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட் - தமிழ் டிரெய்லர் வெளியீடு!

படம் டிச.25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட் - தமிழ் டிரெய்லர் வெளியீடு!
Published on: 

ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற கற்பனை மற்றும் சாகசத் திரைப்படத் தொடரான ஜுமாஞ்சி வரிசையில், அடுத்து வெளியாகவுள்ள புதிய பாகம் ஜுமான்ஜி: ஓபன் வேர்ல்ட்.

இதுவே இத்தொடரின் கடைசி பாகம் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில், டுவைன் ஜான்சன், டாக்டர் ஸ்மோல்டர் பிரேவ்ஸ்டோன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்.

இவருடன் கெவின் ஹார்ட்டின் மவுஸ் ஃபின்பார், ஜாக் பிளாக் பேராசிரியர் ஷெல்லி ஓபரான் மற்றும் கரேன் கில்லனின் ரூபி ரவுண்ட்ஹவுஸ் ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் நிக் ஜோனாஸ், ஆக்வாஃபினா, டேனி டிவிட்டோ, அலெக்ஸ் வோல்ஃப் மற்றும் மேடிசன் ஐஸ்மேன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முந்தைய பாகங்களைப் போல வீரர்கள் வீடியோ கேமிற்குள் செல்லாமல், இந்த முறை ஜுமான்ஜி விளையாட்டு தனது கன்சோலை விட்டு வெளியேறி நிஜ உலகிற்குள் நுழைந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஜேக் காஸ்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.

இந்நிலையில் இன்று இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25 வெளியாகிறது.

X