அர்ஜுன் தாஸ் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

‘ஜான் டோ’ படத்தில் ஏ. ராவ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா நடராஜன் நடிக்கிறார்.
அர்ஜுன் தாஸ்
Published on: 
Summary

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மிஸ்டரி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃபிளிக்ஸில் ஓ.டி.டி-யில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'ஜான் டோ' (John Doe) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குநர் மதுமிதா இயக்குகிறார்.

கடந்த வாரம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. போலீஸ் அதிகாரியாக சந்துரு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு விறுவிறுப்பான மிஸ்டரி கிரைம் திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது. அர்ஜுன் தாஸுடன் இணைந்து சஞ்சனா நடராஜன் மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கதாபாத்திரம் போஸ்டர்

‘ஜான் டோ’ படத்தில் ஏ. ராவ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா நடராஜன் நடிக்கிறார். இதுதொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி (சாட்டிலைட்) ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான பிறகு, இத்திரைப்படம் முன்னணி டிஜிட்டல் தளமான நெட்ஃபிளிக்ஸில் ஓ.டி.டி-யில் வெளியாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் 'லக்கி' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜாரா வினீத் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com