ஜன நாயகன் திரைப்படம் ஒரு சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும் - பிரியாமணி

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஜன நாயகன் திரைப்படம் ஒரு சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும் - பிரியாமணி
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.

பிரியாமணி நடிப்பில் ரேவதி இயக்கத்தில் குட் வைஃப் வெப் தொடர் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரியாமணி ஜன நாயகன் படத்தை பற்றி பேசியுள்ளார் அதில் " ஜன நாயகன் படத்தில் நடித்தது மிகப்பெரிய சந்தோஷம். என்னுடைய திரைப்பயணத்தில் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். விஜயுடன் நடித்தது மிகவும் எக்சைட்டாக இருந்தது. இப்படத்தில் நான் மிகவும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன்" என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com