மிரட்டலான கூட்டணியுடன் வரும் ஜெயிலர் 2 - Runtime & Sensor அப்டேட் வெளியானது!

முதல் முறையாக IMAX-ல் ரஜியினின் திரைப்படம் - டிரெய்லரை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டம்.
Jailer 2
Published on: 
Summary

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் தணிக்கை பணிகள் நிறைவடைந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது சென்சார் சான்றிதழ் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Sensor & Runtime

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படத்தின் தணிக்கை விவரங்களைப் புதுப்பித்துள்ளது. படத்திற்கு 'UA 16+' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

'ஜெயிலர் 2' திரைப்படம் 165 நிமிடங்கள் 18 வினாடிகள் (2 மணி நேரம் 45 நிமிடங்கள் 18 வினாடிகள்) ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான கூட்டணி

2023-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த இரண்டாம் பாகத்தில், பழைய நட்சத்திரங்களுடன் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர்.

மீண்டும் இணையும் நட்சத்திரங்கள் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, விநாயகம் மற்றும் ஜாஃபர் சாதிக்.

கேமியோ ரோல்கள் முதல் பாகத்தைப் போலவே மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த பாகத்திலும் தோன்றுவது டிரெய்லர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, அபிக்ஷா போர்வால், அண்ணா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், ஷம்னா காசிம் மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

IMAX ரிலீஸ்!

'ஜெயிலர் 2' திரைப்படம் வழக்கமான திரையரங்குகள் மட்டுமின்றி IMAX திரைகளிலும் வெளியாகவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் பரவலாக IMAX-ல் வெளியாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக் குழுவினர்

முதல் பாகத்தில் பணியாற்றிய அனிருத் இசையமைப்பாளராகவும் , விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவையும், ஆர். நிர்மல் படத்தொகுப்பையும் , டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கம், பல்லவி சிங் மற்றும் முத்துல் ஹஃபீஸ் ஆடை வடிவமைப்பு ஆகியோர் இதிலும் தொடர்ந்துள்ளனர்.

இந்த பாகத்தில் புதிய வரவாக சண்டைப் பயிற்சி இயக்குனர் சேத்தன் டி'சோசா இணைந்துள்ளார்.

ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்!

'ஜெயிலர் 2' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளியாகியுள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவுள்ள தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதிய படம். 1981-ல் வெளியான 'தில்லு முல்லு' படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம் இதுவாகும்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் மற்றொரு திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com