நாளை வெளியாகும் ஜெயிலர் 2: 'ஆராவின் நாயகனை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'- அஷ்வத் மாரிமுத்து!

டைகர் முத்துவேல் பாண்டியனாக மீண்டும் களமிறங்கும் ரஜினிகாந்த்.
Ashwath Marimuthu - Rajinikanth
Published on: 
Summary

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, 3 ஆண்டுகள் கழித்து வெளியாகும் இந்த இரண்டாம் பாகத்திற்கு ஆடியோ லான்ச் மற்றும் பெரிய விளம்பரங்கள் இல்லாத போதிலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.

அஷ்வத் மாரிமுத்துவின் வாழ்த்து

ரஜினிகாந்தின் அடுத்த படமான 'தர்மன்' திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, ஜெயிலர் 2 ரிலீஸையொட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நாளை திரையில் 'ஆரா'வின் நாயகன் ரஜினி அவர்களின் மாஸான ஆரா பார்மிங்கை பெரிய திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டு, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மிரட்டலான கதைக்களம்

இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மீண்டும் தனது புகழ்பெற்ற 'டைகர்' முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் தடம் பதிக்கிறார்.

தனது குடும்பத்தைப் பாதுகாக்கவும், தனது பாரம்பரியத்தைக் காக்கவும், ஒரு புதிய பாதாள உலக தாதாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக முத்துவேல் பாண்டியன் மீண்டும் தனது பழைய கொடூரமான அதிரடிப் பாதைக்குத் திரும்புவதே 'ஜெயிலர் 2' படத்தின் முக்கிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளம்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு ஆகியோருடன் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் தங்களது கேமியோ பாத்திரங்களில் மீண்டும் இணைந்துள்ளனர்.

மேலும் புதிய வரவுகளாக எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். நடிகர் ஹிருத்திக் ரோஷனும் இதில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

'தர்மன்' மற்றும் 'KHxRK' கூட்டணி அப்டேட்

இதற்கிடையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் ராம் போதினேனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு "மருத்துவர்" கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படங்களை அடுத்து, நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இணையும் பிரம்மாண்ட 'KHxRK' திரைப்படமும் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com