தேனிசை தென்றல் தேவா பிறந்தநாளில் வெளியாகும் 'Jail Mates' படத்தின் முதல் பாடல்!

தேவா பாடிய கடைசி பாடல் ஆன்மிக பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jail Mates  - Deva
Published on: 
Summary

மறைந்த 'தேனிசைத் தென்றல்' தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலை நாளை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பாடல்கள் மற்றும் படக்குழு விவரங்கள்

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த தேவா பாடிய ஆன்மிகப் பாடல் இடம்பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன், கார்த்திக் நேத்தா, திரைவண்ணன் மற்றும் சக்தி உமா பாலகிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

மெட்டா சினிமா பாணி

‘புதிய கீதை’ படப்புகழ் கே.பி.ஜெகன் இயக்கத்தில் தென்னிந்தியாவில் முதன்முறையாக ‘மெட்டா சினிமா’ பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் தனது சொந்தப் பெயரிலேயே நடிக்கிறார்.

இதில் விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, எம்.எஸ்.பாஸ்கர் சிவனடியார் வேடத்தில் சிறப்புத் தோற்றத்திலும் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைக்களம்

2017-ஆம் ஆண்டு இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் அடிப்படையாகக் கொண்டு, திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படம் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது.

X