‘எம்.ஜி.ஆர்.-ன் அதே மாஸில்தானே எங்கள் தலைவரும் இருக்கிறார்’ - 'டிஎன் 2026' டீசர்!

டிஎன் 2026 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
‘எம்.ஜி.ஆர்.-ன் அதே மாஸில்தானே எங்கள் தலைவரும் இருக்கிறார்’ -  'டிஎன் 2026' டீசர்!
Published on

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள நகைச்சுவைப் படம் ‘டிஎன் 2026’. இப்படம் வரும் 10ம் தேதி தேர்தலுக்கு முன்னதாக வெளியாகிறது.

இப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறார் உமாபதி ராமையா. இப்படத்தில் நடிகர் நட்டி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரைப் பார்க்கும்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டதுபோல் தெரிகிறது. தற்போது இந்த டீசர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com