கர்ப்பம் குறித்த பதிவு- பூனம் பாண்டேவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தான் கர்ப்பமாக இருப்பது போல உள்ள புகைப்படத்தை நடிகை பூனம் பாண்டே நேற்று 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டார்.
கர்ப்பம் குறித்த பதிவு- பூனம் பாண்டேவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
Published on

சினிமாவில் சர்ச்சை என்றாலே 'டக்'கென நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று, பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்றபின் 'கப்சிப் ஆகிப்போனார்.

அதனைத்தொடர்ந்து தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியிட்டு, பின்னர் இது விழிப்புணர்வுக்காக செய்த முயற்சி என்று சப்பைக்கட்டு கட்டினார்.

இந்தசூழலில் தான் கர்ப்பமாக இருப்பது போல உள்ள புகைப்படத்தை அவர் நேற்று 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அது எப்படி சாத்தியம்? குழந்தைக்கு தந்தை யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் உலக முட்டாள்கள் தினம் என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1-ந்தேதியான நேற்று ரசிகர்களை ஏமாற்றும் முயற்சியாக பூனம் பாண்டே இப்படி பதிவு வெளியிட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பூனம் பாண்டேவை ரசிகர்கள் கண்டபடி வார்த்தைகளை பதிவிட்டு வறுத் தெடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com