டோனி ஸ்டார்க்கின் ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரம் மறுவடிவமைப்பு - மார்வெல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

மார்வெல் காமிக்ஸ் மற்றும் மார்வெல் சினிமாடிக் யுனிவேர்ஸ் ஆகிய இரண்டிலும் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமாக அயர்ன் மேன் உருவாக்கப்பட்டது.
Ironman
Published on: 
Summary

ஹாலிவுட்டில் நடிகர் டோனி ஸ்டார்க் நடித்திருந்த அயர்ன் மேன் கதாபாத்திரம் தற்போது மேம்படுத்தப்பட்டு அயர்ன் திங் (Iron thing) என்ற மிகப்பெரய தோற்றத்தில் காட்சியளிக்கும் வகையில் ‘ஹல்க் வார்: இன்ஃபெர்னல் ரேஜ்’ என்ற காமிக் புத்தகத்தில் வெளியாக உள்ளது.

மார்வெல் காமிக்ஸ் மற்றும் மார்வெல் சினிமாடிக் யுனிவேர்ஸ் ஆகிய இரண்டிலும் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமாக அயர்ன் மேன் உருவாக்கப்பட்டது.

இந்த அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்திருந்தார்.

இவர் ஒரு கண்டுபிடிப்பாளராக சக்திவாய்ந்த உடைகளை தயாரித்து அவற்றின் மூலம் இந்த உலகை காப்பாற்றுவது போன்று, கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அயர்ன் மேன் கதாபாத்திரம் வெற்றியை பெற்று, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ’அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் 2019 இல் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த டோனி ஸ்டார்க் இறுதியில் இறந்திவிடுவதாக முடிந்திருந்தாலும், டிசம்பர் 18 இல் வெளியாகவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் டாக்டர் டூம் வேடத்தில் டோனி ஸ்டார்க் நடித்திருக்கிறார்.

ஹல்க் வார்: இன்ஃபெர்னல் ரேஜ்

இந்த நிலையில் வழக்கமான மனிதர்களை போன்ற தோற்றத்தில் வெளிவந்த அயர்ன்மேன் கதாபாத்திரம், ஹல்க் போன்ற மிகப்பிரமாண்ட அளவில் ‘ஹல்க் வார்: இன்ஃபெர்னல் ரேஜ்’ (Hulk war: Infernal rage) என்ற காமிக் புத்தகத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பு மார்வெல் வாசகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும், இந்த புதிய கதாபாத்திரமானது காமிக் புத்தகத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்வெல் சினிமாடிக் யுனிவேர்ஸ் கதைக்களத்தில் தோன்றும் அயர்ன் மேனை குறிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

அயர்ன் மேன் வடிவமைப்பு கலைஞர்

இதுகுறித்து அயர்ன் மேன் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு ஓவிய கலைஞர் நிக் க்ளெய்ன் கூறுகையில், இது மிகப்பெரிய நரம்புகள் புடைத்த சதையாலான ஒரு கட்டி என வர்ணித்தார். மேலும் இதுவே தனக்கு மிகவும் பிடித்தமான வடிவமைப்பாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

X